கனடாவில் இருந்து இறைச்சிக்காக குதிரைகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதனை போன்று இறைச்சிக்காக குதிரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 2000 குதிரைகள் இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக ஜப்பானுக்கு இந்த குதிரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
பிரபல கனடிய பாடகர் ஜான் அர்டன் என்பவரினால் குதிரைகள் இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுவதற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இறைச்சிக்காக குதிரைகள் கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்வதனை தடுக்கும் நோக்கில் அவர் கையப்பங்களை திரட்டி வருகின்றார்.
இதுவரையில் சுமார் 36 ஆயிரம் கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணத்திற்காக இவ்வாறு குதிரைகளை ஏற்றுமதி செய்வது தவறானது என பாடகர் ஏர்டெல் குற்றம் சுமத்தியுள்ளார்.