கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மில்டன் பகுதியில் தனது வீட்டை கொள்ளையிட வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 22 வயதான இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இளைஞர் மீது போலீசார் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
கும்பலொன்று வீட்டிற்குள் புகுந்து கொள்ளையிட முயற்சித்த போது குறித்த இளைஞர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்குள் அத்து மீறி கொள்ளையிட முயற்சித்த நபர்கள் மீது சட்ட ரீதியான துப்பாக்கியைக் கொண்டு இளைஞர் சுட்டதாகவும் இது ஓர் தற்காப்பு முயற்சி எனவும் இளைஞரின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.