Home இந்தியா இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி

இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி

by Jey

சர்வதேச விண்வெளி மையம் இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருக்கிறது என்று தகவல் தெரிவித்துள்ளது.

இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. புயல் இன்று (செவ்வாய் கிழமை) மொரிஷியசை தாக்கும் எனவும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சூறாவளி புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாக தாக்கும், கனமழை வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, தென் ஆப்பிரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் உச்சகட்ட தயார் நடவடிக்கையில் உள்ளன.

புயலின் கண் பகுதி ஆக்ரோஷமாக நகர்ந்து செல்லும் காட்சியை சர்வதேச விண்வெளி மையம் வீடியோ பிடித்திருக்கிறது. ஆக்ரோஷ சூறாவளி புயல் நகரும் காட்சி வேகமாக பரவி வருகிறது.

related posts