கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே உள்ளன.
இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள பொது கூட்டங்கள், பேரணிகள், யாத்திரைகளை நடத்தி வருகின்றன.
இதில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இதன்படி, சமீபத்தில் பா.ஜ.க. தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.பி. நட்டா கர்நாடகாவின் உடுப்பி நகருக்கு நேற்று வருகை தந்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;- “இந்திய வரலாற்றில் மோடியைப் போல் சிறந்த பிரதமர் வேறு யாரும் இல்லை.
இந்திய மாணவர்கள் 22,500 பேரை மீட்பதற்காக ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தினார். உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட பெரும்பாலான மாணவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள்.