Home இந்தியா தமிழக மக்கள் நல்லவர்களையும், திறமையானவர்களையும் அடையாளம் காண வேண்டும்

தமிழக மக்கள் நல்லவர்களையும், திறமையானவர்களையும் அடையாளம் காண வேண்டும்

by Jey

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோவை வந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மாநிலங்களில் பொறுப்பேற்கும் கவர்னர்கள் பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதியால் தேர்வு செய்யப்படுகின்றனர்.

எங்களைப்போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களுக்கு தமிழக மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் அங்கீகாரம் அளிப்பதில்லை. எனவே மத்திய அரசு திறமையானவர்களை அடையாளம் கண்டு கொண்டு கவர்னர்களாக நியமிக்கிறது.

தமிழக மக்கள் எங்களை போன்றவர்களை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்து இருந்தால் அதிகம் பேர் மத்திய மந்திரி ஆகி இருப்பார்கள். எனவே தமிழக மக்கள் நல்லவர்களையும், திறமையானவர்களையும் அடையாளம் காண வேண்டும்.

இதை சொன்னால் அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வரக்கூடும். சட்டம்-ஒழுங்கு தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதற்கு, யார் அந்த வாய்ப்பை கொடுக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கவர்னரான நான் கருத்து கூற முடியாது. இதுகுறித்து அண்ணாமலை தான் கூறுவார்.

related posts