இலங்கை பெண்கள் தலா 5ஆயிரம் டொலர்களுக்கு அழைத்து செல்லப்பட்டு தாய்லாந்தில் தொழில் பெற்று தருவதாக கூறி சீனர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
விற்கப்பட்ட சீனர்களிடம் இருந்து தப்பிச் சென்றதாக தாய்லாந்து பொலிஸ் காவலில் இருந்த குறித்த பெண்கள் விடுவிக்கப்பட்டு நேற்று இந்நாட்டிற்கு வந்துள்ளனர்.
ருவான் பத்திரன என்பவரின் மகன் என கூறப்படும் நபரே இவ்வாறு தம்மை விற்பனை செய்ததாக நாடு திரும்பிய பெண்கள் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளனர்.
சீனர்களின் தொழிற்சாலைகளில் எங்களை சித்திரவதைக்குட்படுத்தி வேலை செய்ய வைத்தார்கள். வெயிலில் நிற்க வைப்பார்கள். வெயிலில் ஓடச் சொல்லுவார்கள். மின்சாரம் பாய்ச்சினார்கள்.சுமார் ஒரு மாத காலம் உணவின்றி அறையில் அடைத்து வைத்தார்கள்.
இலங்கைக்கு அனுப்புவதற்கு 5000 டொலர்களை செலுத்துமாறு கூறியதாகவும் யுவதிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் அம்பலாந்தோட்டை உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் அனுர சேனாரத்னவின் அலுவலகத்தில் இருந்து ருவான் பத்திரன என்ற மொழிபெயர்ப்பாளர் பணத்திற்கு பெண்களை கடத்துவதாக தெரியவந்துள்ளது.