Home சினிமா அனுஷ்காவின் மார்க்கெட்டு மட்டும் சரிந்தது

அனுஷ்காவின் மார்க்கெட்டு மட்டும் சரிந்தது

by Jey

மாதவன் நடித்த ரெண்டு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுஷ்கா. அதன் பிறகு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன.தொட்டதெல்லாம் தங்கம். இதனால், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார்.

பின்னர் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இது தவிர, அவர் கதாநாயகியாக நடித்த அருந்ததி, பாகமதி போன்ற படங்களும் வசூலில் முன்னேறி அனுஷ்காவை தனி கதாநாயகியாக உயர்த்தியது.

பின்னர், அனுஷ்கா பாகுபலியில் தேவசேனாவாக நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திகைக்க வைத்தார்.

ஆனால் இப்போது அனுஷ்காவுக்குப் போட்டியாக இருந்த திரிஷா, நயன்தாரா போன்ற ஹீரோயின்கள் இன்னும் சளைக்காமல் நடித்துக் கொண்டிருந்தாலும், அனுஷ்காவின் மார்க்கெட்டு மட்டும் சரிந்தது. அனுஷ்காவின் மார்க்கெட் திடீரென சரிந்ததற்கு முக்கிய காரணம் அவரது உடல் எடை அதிகரிப்புதான்.

2015ல் நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். பிரகாஷ் கோவெலமுடி இயக்கிய இந்தப் படத்தில் அவர் உடல் குண்டான வேடத்தில் நடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

 

related posts