8வது மகளிர் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இதில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி 9 ரன், மந்தனா 2 ரன், அடுத்து வந்த யாஷ்டிகா 4 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா மற்றும் ஹர்மன்பிரீத் இணை சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். இவர்கள் இருவரும் ஆடிய விதத்தை பார்க்கையில் இந்திய அணி எளிதாக வென்று விடும் என நினைத்து கொண்டிருந்த வேளையில் ஜெமிமா 43 ரன்னில் அவுட் ஆனார்