கனடாவின் பீட்டர் ப்ரோ எனும் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செமொங் மற்றும் லின்சி ஆகிய வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்து விட்டதாக ஒன்றாரியோ போலீசார் தெரிவிக்கின்றனர்.
மற்றும் ஒரு நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் நபருக்கு உயிர் ஆபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
வாகன விபத்திற்கான காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் பற்றிய விபரங்கள் எதனையும் போலீசார் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது