Home விளையாட்டு இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 315 ரன்கள்…..

இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 315 ரன்கள்…..

by Jey

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 267 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த ஜேக் க்ராவ்லி மற்றும் பென் டக்கட் அகியோர் முறையே 2 ரன் மற்றும் 9 ரன்னிலும், அடுத்து வந்த ஓலி போப்பும் 10 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய ரூட், புரூக் இணை அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் சதம் அடித்து அசத்தினர். ரூட் 101 ரன்னிலும், புரூக் 184 ரன்னிலும் இருந்த போது மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது.

அப்போது இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 315 ரன்கள் குவித்திருந்தது. தொடர்ந்து 2வது நாளில் இன்று களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புரூக் 186 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய ஸ்டோக்ஸ் 27 ரன், போக்ஸ் 0 ரன், பிராட் 14 ரன், ராபின்சன் 18 ரன்னில் அவுட் ஆகினர். இதையடுத்து 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது.

இதையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் லதாம் 35 ரன், கான்வே 0 ரன், அடுத்து வந்த வில்லியம்சன் 4 ரன், வில் யங் 2 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

நியூசிலாந்து அணி 42 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறிக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் 2ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.

நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 23 ரன், டாம் ப்ளெண்டல் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேக் லீச் தலா 3 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். 3ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

related posts