அதிபர் ஜெலெஸ்கி உக்ரைனில் ரஷிய படையெடுப்பு துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், உயிரிழந்த உக்ரைனிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
புனித சோஃபியா சதுக்கத்தில் குழுமியிருந்த உக்ரைனிய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், போராடும் உக்ரைனிய வீரர்களை வெகுவாக பாராட்டினார்.
மேலும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார் ஜெலெஸ்கி.