குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என்று தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கே.சிவகுமாரிடம், அ.தி.மு.க. தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:- ஈரோட்டில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வருகிற மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கையில் எப்போது வழங்கப்படும் என்ற தேதி அறிவிக்கப்படும் என்று பேசி உள்ளார்.
முதல் -அமைச்சரின் இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.