பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்றைய தினம் (27.02.2023) அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், மீன் உள்ளிட்ட உடைமைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
கடந்த 24ஆம் திகதி வங்கக்கடலில் மீன்பிடித்த தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே அடுத்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட இரு நிகழ்வுகளும் இந்தியக் கடல் எல்லைக்குள் நடந்துள்ளன. மீனவர்கள் எல்லை தாண்டினால் கூட அவர்களைத் தாக்கும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு இல்லை.