கனடாவின் அரசாங்க நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கருவிகளில் டிக் டாக் செயலி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கையடக்க தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் பிரதம தகவல் அதிகாரியின் டிக்டாக் குறித்த மீளாய்வின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த செயலியானது அந்தரங்க தன்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குறித்த செயலியை அரச கருவிகளில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றிலும் அரசாங்க ஊழியர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.