எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வரை சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதாயின் சீனாவிடம் இருந்து இலங்கை பெற்றுக் கொண்டுள்ள கடன் தொகையை மீளச் செலுத்துவதற்கு பத்து வருட சலுகைக் காலமொன்றை இலங்கை பெற்றுக் கொள்ள வேண்டும்.
எனினும் உடனடியாக அது சாத்தியம் இல்லை என்பதன் காரணமாக தற்போதைய நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வரை குறித்த கடனுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று கொழும்பு பல்கலைக்கழக மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக பொருளாதாரத்துறையின் சிரேஷ்ட பேராசிரியர்களான வசந்த அதுகோரளை, கலாநிதி பிரியங்க துனுசிங்க ஆகியோர் சுட்டிக் காட்டியுள்ளன
எனினும் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப் பெறாதவிடத்து இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமை மேலும் சிக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது