நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 24-ம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 209 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆனது.
பாலோ ஆனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து 483 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆனால், இங்கிலாந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறியது.
80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தடுமாறிய இங்கிலாந்தை பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மீட்டனர். ஆனால், இங்கிலாந்து 201 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆனார். அணி 202 ரன் எடுத்த நிலையில் ரூட் அவுட் ஆனார்.
ஆனால், இறுதியில் போக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வீழ்ந்தன.