Home இலங்கை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு ……….

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு ……….

by Jey

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க போதிய புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காததற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா ரூ.75 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ரூ. 50 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

related posts