ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
ஒன்றாரியோ மாகாணத்தின் Guelph என்னும் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக குறித்த ஊடகவியலாளர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார்.
வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வாகனத்தில் மோதுண்டு குறித்த ஊடகவியலாளர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் பிரபல ஊடக நிறுவனம் ஒன்றின் படப்பிடிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.