கனடாவின் அனேக மாகாணங்களில் டிக் டாக் செயலியை தடை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள தொடர்பாடல் சாதனங்களில் டிக் டாக் செயலியை தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கனடிய மத்திய அரசாங்கம் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதித்திருந்தது.
அதாவது, அரசாங்க நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களில் இந்த டிக் டாக் செயலியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது.
இந்த செயலியானது நபர்களின் அந்தரங்க உரிமைக்கு குந்தகம் ஏற்படுத்த கூடும் எனவும் பாதுகாப்பு சிக்கல் உருவாகக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசாங்கத்தினாலும் மாகாண அரசாங்கங்களினாலும் வழங்கப்படும் தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயலி பயன்படுத்துவது செய்யப்படும் சாத்தியங்கள் அதிக அளவில் காணப்படுகின்றது.
ஏற்கனவே மத்திய அரசாங்கம் இந்த தடையை அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.