Home உலகம் குறையாமல் உள்ள பல நாடுகளில் கொரோனா பெருந்தொற்றின் தீவிரம்

குறையாமல் உள்ள பல நாடுகளில் கொரோனா பெருந்தொற்றின் தீவிரம்

by Jey

ஒரு சில மாதங்களுக்கு பின்னர் சீனாவில், தொற்று கண்டறியப்பட்ட தருணத்தில் பல அலைகளாக பரவ தொடங்கி நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உலகம் முழுவதும் பரவலாக, பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது.

எனினும், அதற்கு முன்பே, சில ஐரோப்பிய நாடுகளில் கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரசின் இருப்பு கண்டறியப்பட்டது என கூறப்பட்டது. எனினும், அந்த தகவல்கள் பரவலாக வெளிவராத நிலையில், பாதிப்புகளும் காணப்படாத சூழல் இருந்தது.

இது பல தொடர் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. உலக நாடுகளை 3 ஆண்டுகளாக பாதிப்பிற்கு உள்ளாக்கிய கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் பல நாடுகளில் இன்னும் குறையாமல் உள்ளது. அதன் நீண்டகால தாக்கம் மனிதர்களிடம் தொடர்ந்து காணப்படுகிறது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. தரை, வான், ரெயில் போக்குவரத்து முடக்கத்தினால், பொருளாதார சரிவை நாடுகள் சந்தித்தன. லட்சக்கணக்கான மனித உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானோருக்கு கடுமையான நீண்டகால பாதிப்புகளையும் ஏற்படுத்தி சென்றது.

related posts