Home சினிமா எனக்கு நான்தான் போட்டியாக இருக்கிறேன்

எனக்கு நான்தான் போட்டியாக இருக்கிறேன்

by Jey

பூலோகம் படத்தை எடுத்து பிரபலமான கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள படம் அகிலன். இதில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜெயம் ரவி அளித்துள்ள பேட்டியில், ”துறைமுகத்தை மையமாக வைத்து மாபியா படமாக அகிலன் தயாராகி உள்ளது. கஷ்டப்பட்டு படப்பிடிப்பை நடத்தினோம்.

பெரிய முயற்சி எடுத்து படமாக்கிய படக்குழுவினருக்கு நன்றி. எனது கதாபாத்திரம் புதுமையாக இருக்கும், கதை சொல்லும்போதே கதை சிறப்பாக இருந்ததை புரிய முடிந்தது. சண்டை காட்சிகள் கதையோடு இருக்கும். நடுக்கடலில் ஒரு சண்டை படமாகி உள்ளது.

வெயில், உப்புத்தண்ணீர் என்று அதை கஷ்டப்பட்டு எடுத்தோம். எனது கதாபாத்திரம் கொஞ்சம் எதிர்மறையாக இருக்கும். தோற்றத்திலும் லேசான மாற்றம் இருக்கும்.

படம் நன்றாக வந்துள்ளது. சினிமாவில் நான் எந்த நடிகருக்கும் போட்டியாக இல்லை. எனக்கு நான்தான் போட்டியாக இருக்கிறேன். யாருடனும் போட்டி இல்லாமல் இப்படி தனியாகவே இருந்து விட்டு போய் விட நினைக்கிறேன். நான் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் முதல் பாகத்தை விட பிரமாதமாக இருக்கும்” என்றார்.

related posts