Home இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் வேலைத்திட்டம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் வேலைத்திட்டம்

by Jey

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் வேலைத்திட்டம் தொடர்பில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை தற்போது நிறைவு செய்துள்ளது.

விரைவில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான இறுதிக் கட்டத்திற்கு வெற்றிகரமாகச் செல்ல முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற மாதாந்த நிதிக் கொள்கை அறிக்கையை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விரைவில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான இறுதிக் கட்டத்திற்கு வெற்றிகரமாகச் செல்ல முடியும், பின்னர் அனைத்தும் சிறந்த முறையில் மீளமைக்கப்படும் என நம்புகிறோம்.

மாற்று விகிதங்கள், கையிருப்பு அதிகரிப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், சந்தை வட்டி வீதம் மேலும் குறையும் போக்கு, அரசாங்க வருமான அதிகரிப்பு போன்றவற்றில் நல்ல போக்குகள் காணப்படுகின்றது என குறிப்பிட்டார்.

இதன்போது, “எதிர்பார்த்த காலத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு கிடைக்காவிடில் இரண்டாவது திட்டம் உள்ளதா” என ஊடகவியலாளர்கள் வினவிய போது அதற்கு பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர்,

​​சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற வேண்டிய நிதி வசதி எதிர்பார்த்த காலத்திற்குள் கிடைக்காவிடின், அவர் தற்போதைய வளர்ச்சியை தொடர முடியும் என குறிப்பிட்டார்.

மேலும், எதிர்பார்த்தபடி சீனா இந்த திட்டத்தை ஆதரித்ததா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இதுவரை சீனா கூட இந்த நாட்டுக்கு வெற்றிகரமாக பதிலளித்துள்ளது எனவும் மத்திய வங்கி ஆளுநர் கூறினார்.

related posts