திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ருக்மணி தலைமை தாங்கினார். கல்லூரி நிறுவனர் முனிரத்தினம், கல்லூரி செயலாளர் ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வகுமார் வரவேற்றார்.
விழாவில் தமிழ்நாடு அறிவியல் சங்க செயலாளர் கோபால் பார்த்தசாரதி கலந்துகொண்டு தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார்.
மேலும் நிறுவன குழுமங்களின் தலைவர் நா.சுரேஷ்குமார் ஆளில்லா விண்கலம் பறக்கும் விதத்தினை செய்முறை மூலம் பறக்கவிட்டு மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.
மேலும் தண்ணீரின் அதிசயங்கள் மற்றும் அதனின் அறிவியல் இன்றியமையாமை பற்றி மாணவிகளுக்கு செயல் விளக்கமளித்தார். இதில் அனைத்து அறிவியல் துறை மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
அதைத் தொடர்ந்து மாணவிகளின் அறிவியல் மாதிரிகள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டன. முடிவில் வேதியியல் துறை தலைவர் ஷோபா நன்றி கூறினார்.