Home இலங்கை மனித உரிமைகள் பேரவையின்உரையாற்றிய – ஹிமாலி அருணதிலக

மனித உரிமைகள் பேரவையின்உரையாற்றிய – ஹிமாலி அருணதிலக

by Jey

மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது வழக்கமான அமர்வில் உரையாற்றிய – ஹிமாலி அருணதிலக

மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையின் அனுமதியின்றி 51/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக குற்றம் சுமத்தியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது வழக்கமான அமர்வில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கூறிய இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் தாம் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

எனவே பேரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை வலுப்படுத்தும். தீர்மானம் 46/1 இன் இலங்கை நாட்டு மக்களுக்கு உதவாது. அது இலங்கை சமூகத்தை பிளவுப்படுத்தும். அத்துடன் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்கு உதவாது என்று ஹிமாலி குறிப்பிட்டுள்ளார்.

மோதல், தேர்வு மற்றும் ஒருதலைப்பட்சம் ஆகியவற்றின் மூலம் அல்லாமல், உரையாடல் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெவ்வேறு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவை உபகுழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்குதல், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குதல், வடக்கு மற்றும் கிழக்கிற்கான விரைவான அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் விடயங்களுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட விடயங்களை விரைவாகத் தீர்க்க வேண்டிய விடயங்களை இந்தக் குழு அடையாளம் கண்டுள்ளது.

குறிப்பாக காணாமல் போனவர்கள், மீள்குடியேற்றம் மற்றும் காணி தொடர்பான விடயங்களும் இவற்றில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார் இலங்கையின் அரசியலமைப்பின் 21வது திருத்தம், 2022 அக்டோபரில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

இது, சுயாதீன மேற்பார்வை, அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் அமைப்பு ஆகியவற்றை மேலும் பலப்படுத்துகிறது என்றும் அருணதிலக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

related posts