இந்தியாவில் 824 கடற்தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்குஅண்மையில் கரையோரப் பாதுகாப்பு படை என்று கூறி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது,
இந்த பயிற்சி இந்திய, இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் என தேசிய கடற்தொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் மகாசபைத் தலைவருமான இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (05.03.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த பயிற்சியில் முத்துப்பாண்டி என்ற ஒருவர் இந்திய கடைப்படையில் இணைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளோர் மாநிலப் படையில் இணையவுள்ளதாக தகவல் கிடைத்திருக்கின்றது.
இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
உண்மையிலே இந்த பயிற்சி வழங்கப்பட்டது என்பது ஒரு விரிசலைத்தான் உருவாக்கும். அரசாங்கம், இரண்டு நாட்டு தமிழர்களையும் ஒன்றாக இணைவதற்கு இடமளிக்கக் கூடாது என்ற ரீதியில் திட்டமிட்டு செய்யப்படுவதாக தான் எங்களுக்கு தோன்றுகிறது. ஆகையால் இந்த பயிற்சியை வழங்குவதை உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது.