இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ். இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளமையால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனையை சுற்றி கம்பிகள் நடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.