உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் பதானா கிராமத்தை சேர்ந்த முதியவர் நது சிங் (வயது 85). இவருக்கு ஒரு மகன், 4 மகள்கள் என மொத்தம் 5 பிள்ளைகள் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது.
நது சிங்கின் மகன் சஹரன்பூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இதனிடையே, நது சிங்கின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் வயதுமுதிர்வால் உயிரிழந்துவிட்டார்.
மனைவி உயிரிழந்ததையடுத்து நது சிங் தனியாக வாழ்ந்தார். மகன், மகள்கள் என பிள்ளைகள் 5 பேர் இருந்தபோதும் தன்னை யாரும் கவனிக்காததால் கடந்த 7 மாதங்களுக்கு முன் நது சிங் தனது கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்தார்.
முதியோர் இல்லத்தில் சேர்ந்து 7 மாதங்கள் ஆன போதும் நது சிங்கை அவரது மகனோ, 4 மகள்களோ யாரும் வந்து சந்திக்கவில்லை.
5 பிள்ளைகள் இருந்தும் யாரும் வந்து சந்திக்காததாலும், அவர்கள் அனைவரும் கைவிட்டதாலும் விரக்தியடைந்த நதுசிங் தனது சொத்து அனைத்தையும் உத்தரபிரதேச அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.