ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த பிப்ரவரி இறுதியில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தில், பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். ஐரோப்பிய நாடுகளில் மிக பெரிய வர்த்தக கூட்டாளியாக ஜெர்மனி திகழ்கிறது என்று பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டார்.
இந்த பயணத்தில், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளேன்.
இந்த முக்கிய விசயத்தில் தனிப்பட்ட முறையில் நானே செயல்படுவேன் என அதிபர் ஸ்கால்ஸ் கூறினார். இதன்பின்னர், நாடு திரும்பிய அவர், இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். இதில், வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபர் பைடனை நேரில் சந்தித்து பேசினார்.
சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகள், ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும். ஆனால், அதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தன