டொரன்டோ பாடசாலை ஒன்றில் கறுப்பின மாணவனை துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டொரன்டோவின் ஆரம்ப பாடசாலை ஒன்றில் ஆறு வயதான கருப்பின சிறுவனை ஆசிரியர் இன ரீதியாக துன்புறுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆறு வயதான குறித்த சிறுவனை ஆசிரியர் ஏனைய மாணவர்களிடமிருந்து பிரித்து தனியான ஒரு அறையில் அடைத்து வைத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் டொரன்டோ மாவட்ட பாடசாலைகள் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலையின் அதிபர் பாடசாலையின் துணை அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவர் ஆகியோரின் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் தானும் தமது மகனும் இன ரீதியான துன்புறுத்தல்களுக்கு இலக்காகுள்ளதாகவும் பாடசாலையில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம் பெற்று வந்ததாகவும் குறித்த சிறுவனின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.