வின்னிபிக்கில் இடம்பெற்ற துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் 15 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவத்தில் 17 வயதான மற்றும் ஒரு சிறுவன் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் அதன் போது இரண்டு பேர் காயமடைந்த நிலையில் இருந்ததை கண்டு அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் 15 வயது சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஃபோர்ட்டேஜ் மட்டும் நீஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.