Home கனடா தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரணை

தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரணை

by Jey

கனடாவில் நடைபெற்ற தேர்தல்களின் போது வெளிநாட்டு தலையீடுகள் இடம்பெற்றதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் சீன தலையீடு காணப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சரியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கனடிய அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

குறிப்பாக ndp கட்சி மற்றும் கன்சவர்வேட்டிவ் கட்சி ஆகியன இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன.

தேர்தல்களின் போது வெளிநாட்டு தலையீடு தொடர்பில் விரிவான அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் இதற்கென விசேட அறிக்கையாளர் ஒருவரை தான் நியமிக்க உள்ளதாகவும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

related posts