Home இந்தியா குச்சியால் அடித்த தாய் – சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த குழந்தை

குச்சியால் அடித்த தாய் – சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த குழந்தை

by Jey

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், தாய் சரமாரியாக தாக்கியதில், சுய நினைவை இழந்த 3 வயது ஆண் குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சதீஷ் – செல்வி தம்பதிக்கு, மணிகண்டன், சஞ்சனா, கிஷோர் என 3 குழந்தைகள் உள்ளன. 3 வயது குழந்தையான கிஷோர், வீட்டில் சேட்டை செய்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது ஆத்திரமடைந்த தாய் செல்வி, குழந்தையை குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சுய நினைவின்றி கீழே விழுந்த குழந்தையை, அருகில் உள்ள மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.

எனினும், சிகிச்சைப் பலனின்றி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

related posts