Home இலங்கை 8 மாதங்களில் நெருக்கடியை தீர்க்க முடிந்துள்ளது – ரணில் விக்ரமசிங்க

8 மாதங்களில் நெருக்கடியை தீர்க்க முடிந்துள்ளது – ரணில் விக்ரமசிங்க

by Jey

நேற்று மாலை இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் நாட்டு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் ஒன்று இல்லை. அத்துடன் உள்ளூராட்சி தேர்தல் ஒன்றை நடத்துவதனால் பெரிய மாற்றம் ஒன்று வந்துவிடப்போவதில்லை.

நாங்கள் ரூபாயை மேலும் வலுவடைய செய்ய வேண்டியதே தற்போது முக்கிய விடயமாகும்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு 4 வருடங்களாகும் என பலர் கூறினார்கள். ஆனால் 8 மாதங்களில் நெருக்கடியை தீர்க்க முடிந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்கப்படும். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும். நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் ஏனைய கட்சியினர் தேர்தலை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

பந்து எங்கள் கைகளுக்கு கிடைத்துள்ளது. அடித்து ஆட தயாராக இருங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

related posts