குடும்பம் என்பது கணவன் – மனைவி என இருவரும் உற்சாகமாக மற்றும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சிகரமாக செல்லும்.
பெரும்பாலும் கணவர்கள் வெளியில் வேலைக்கு செல்வதால், வீட்டிலிருக்கும் பெண்கள் நாள் முழுவதும் அதிக வேலை செய்யும் நிலை ஏற்படுகிறது. வீட்டில் அதிக வேலைப்பளு காரணமாக சிரமத்தை சந்திக்கும் பெண்கள் தங்கள் கணவர் வீட்டிலிருக்கும் நேரத்திலாவது சில உதவிகளை செய்தால் நன்றாக இருக்கும் என நினைப்பார்கள்.
இதனால் கணவரிடம் சில உதவிகளை அல்லது வேலைகளை செய்ய சொல்லும் போது கணவர்கள் சோம்பல் அல்லது வேறு காரணங்களால் அதை செய்ய மறுக்கும் போது உறவில் சிக்கல் எழுகிறது.
இந்தநிலையில், வீட்டு வேலைகள் செய்வதற்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும் இதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என மனைவி இவானா என்பவர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.
இவரது மனுவை ஏற்கொண்ட நீதிமன்றம் 25வருடங்களாக தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்த மனைவிக்கு ரூ.1.75 கோடி அளிக்குமாறு கணவனுக்கு ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.