Home சினிமா சினிமா குறித்து சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்த ஸ்ரேயா

சினிமா குறித்து சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்த ஸ்ரேயா

by Jey

`சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேரும் அளவுக்கு உயர்ந்தார் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா . சொந்த வாழ்க்கையில் மனைவியாக, தாயாக மாறிய பிறகும் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு படங்களோடு இந்தியிலும் நடிக்கிறார். ஸ்ரேயா அளித்த பேட்டியில் குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா குறித்து சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்தார். அதன் விவரம்:- கேள்வி: விதியை நீங்கள் நம்புகிறீர்களா? பதில்: நிச்சயம் நம்புகிறேன்.

நமக்கு எது எழுதி வைத்திருக்கிறதோ, அதுதான் நடக்கும் என்பதை பலமாக நம்புகிறேன். கடவுள் நம்பிக்கை உண்டு. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா எனது இஷ்ட தெய்வம். அவரது சங்கல்பம் இல்லாமல் எதுவும் நடக்காது.

கேள்வி: திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி சினிமாவில் தொடர்ந்து நீடிப்பது பற்றி…. பதில்: சினிமா வாழ்க்கையில் எனது பயணம் மிகவும் நன்றாக நடந்தது. ஏற்றத்தாழ்வுகள் என்பது அனைவருக்கும் வரும். அதற்கு நான் ஒன்றும் விலக்கு அல்ல.

சவால்களை எதிர் கொண்டேன். அவற்றை மனோ தைரியத்துடன் சந்தித்து ஜெயித்து வெளியே வந்தேன்.வெற்றி, தோல்விகள் அனைவருக்கும் சகஜம். எல்லாவற்றையும் சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்புகளை கடவுள் ஏற்படுத்திக் கொடுப்பார். அவற்றை எட்டிப் பிடிப்பதுதான் நம் கையில் இருக்கும்.

related posts