அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் 23ஆம் தேதி கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக பைடன் கனடாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி பைடன் மற்றும் அவரது பாரியார் ஜில் பைடன் ஆகியோர் இரண்டு நாட்கள் கனடாவில் தங்கி இருப்பார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
சீன கண்காணிப்பு பலூன், நோராட் கண்ட பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி பைடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி பைடன் கனடிய நாடாளுமன்றில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.