திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் மவுலீஸ்வரனை நேற்று சக மாணவர்கள் அடித்துக்கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவன் மவுலீஸ்வரனை அடித்து கொலை செய்த சக மாணவர்கள் 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம்:- திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கோபி மகன் மவுலீஸ்வரன் (வயது 15) என்பவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று இருந்தார்.
நேற்று மதியம் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்து கொண்டிந்தனர். அப்போது, மாணவர்கள் சிலர் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது, ஏற்பட்ட தகராறில் மவுலீஸ்வரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.