Home விளையாட்டு 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி 3-வது இடத்துக்கு முன்னேறியஇந்திய அணி

4-வது புரோ ஆக்கி லீக் போட்டி 3-வது இடத்துக்கு முன்னேறியஇந்திய அணி

by Jey

9 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, உலக சாம்பியன் ஜெர்மனியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 30-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இந்த கோலை அடித்தார். இந்திய வீரர் சுக்ஜீத் சிங் 32-வது, 43-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோலடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இதனால் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. ஆனால் அதன் பிறகு ஜெர்மனி அணி அடிபட்ட வேங்கை போல் ஆக்ரோஷத்துடன் ஆடி இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தது. ஜெர்மனியின் காப்மேன் பால் பிலிப் 45-வது நிமிடத்திலும், மிட்செல் ஸ்ருதோப் 58-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினர்.

அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. 5-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 4-வது வெற்றியை சுவைத்ததுடன், புள்ளிபட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

ஜெர்மனி அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். ரூர்கேலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-ஜெர்மனி அணிகள் சந்திக்கின்றன.

related posts