12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 14-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.
சென்னையில் மட்டும் தலா 180 மையங்களில் 88 ஆயிரத்து 104 மாணவ-மாணவிகள் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 16 லட்சத்து 39 ஆயிரத்து 367 பேர் எழுத இருக்கின்றனர்.
பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.