Home உலகம் தாய்பாசம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல

தாய்பாசம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல

by Jey

தாய் பாசம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. விலங்குகளுக்கும் தான். அன்பிற்காக பலர் உயிரை கொடுப்பேன் என கூறினாலும் உண்மையிலேயே உயிரை கொடுத்து பெற்றெடுத்தது தாய் என்ற உன்னதமான உறவு தான்.

சாந்த சொரூபியாக இருந்தாலும்தன் குழந்தைகளுக்கு ஒன்று என்றால் கொலைகாரியாக மாறவும் தயங்க மாட்டார்.

இது விலங்குகளுக்கும் பொருந்தும். அப்படி ஒரு சம்பவத்தில் சிங்கத்துக்கும் தாய் ஒட்டகச்சிவிங்கிக்கும் இடையே நடைபெற்ற கடுமையான சண்டை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிமல் வேர்ல்ட்ஸ் 11 இன் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவில், ஒட்டகச்சிவிங்கியின் குட்டியை நோக்கி சிங்கம் ஒன்று ஓடி வருகிறது.

சிறிது நேரத்தில் சிங்கம் ஒன்று மெதுவாக வந்த ஒட்டகச்சிவிங்கி குட்டியின் மீது பாய்ந்து அதைக் கொல்ல முயன்றது.

குட்டி ஒட்டகச்சிவிங்கியால் எதிர்த்துப் போராட முடியவில்லை, இளம் ஒட்டகச்சிவிங்கி தனது முதல் முயற்சியில் தோல்வியடைந்த பிறகு தப்பியோட முயற்சியைக் கைவிட்டு சிங்கத்திடம் அகப்பட்டு கொண்டது. இதனை அறிந்த தாய் ஒட்டகச்சிவிங்கி குட்டியை கடிக்க பாய்ந்த சிங்கத்தை விரட்டியது.

சிங்கம் உடனே தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விட்டால் போதும் என்று தலைத்தெறிக்க ஓடியது. தாய் ஒட்டகச்சிவங்கியின் இந்த இந்த வீரச் செயல் கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

related posts