அதானி குழுமத்துக்கு வங்கிகள் வழங்கியிருக்கும் கடன் விவரங்கள் தொடர்பாக மக்களவையில் இன்று உறுப்பினர் தீபக் பாய்ஜ் எழுப்பிய கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், ஆர்பிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வழங்க முடியாது.
எனவே, அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது1934 சட்ட விதிகளின்படி, பொது நிறுவனத்தின் கடன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட கூடாது.
நிறுவனத்திற்கு கடன் வழங்கிய குறிப்பிட்ட வங்கியானது, கடன் விவரங்களை ஆர்பிஐக்கு தெரிவித்துவிடும். அப்படி அளிக்கப்பட்ட ஆவணங்கள் பாதுக்கப்பாக வைத்து இறுக்கப்படும் என அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.