கியூபெக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சென் லாரன்ஸ் பகுதியில் பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
பாதசாரிகள் மீது டிரக் வண்டி ஒன்று மோதுண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
சந்தேகத்தின் பேரில் 48 வயதான வாகன சாரதியை போலீசார் கைது செய்துள்ளனர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தை வேண்டுமென்றே பாதசாரிகள் மீது மோதுண்டதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர் இந்த சம்பவம் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு படவில்லை என தெரிவிக்கப்படுகிறது