கனடாவில் இடம் பெற்ற பொது தேர்தல்கள் தொடர்பில் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
அண்மையில் நடைபெற்ற இரண்டு பொது தேர்தல்களின் போது வெளிநாட்டு தலையீடு காணப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சீன அரசாங்கம் தேர்தல்களில் தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமித்துள்ளார்.
முன்னாள் ஆளுநர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டன் என்பவரை பிரதமர் டுடே விசேட அறிக்கையாளராக பெயரிட்டுள்ளார்.
விசேட அறிக்கையாளரின் பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.