உளுந்தூர்பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மண்டல அளவிலான தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 290-ந் தேதி நடக்கிறது.
6 மாவட்டங்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உளுந்தூர்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மண்டல அளவிலான தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 20-ந் தேதி (திங்கள்கிழமை) நடக்கிறது.
இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற் பழகுனர் இடங்களை நிரப்ப உள்ளனர்.
சான்றிதழ் என்.சி.வி.டி. மற்றும் எஸ்.சி. வி.டி. முறையில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் 2020 முதல் 2022 வரை பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளர்களும் டிரேடு அப்ரண்டீசாக இந்த பயிற்சியில் சேரலாம்.
ஐ.டி.ஐ.யில் சேர்ந்து பயிற்சி பெறமுடியாத 8, 10, 12-ம் வகுப்பு கல்வித் தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய அப்ரண்டீசாக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும் ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை தொழிற்பழகுனர் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறலாம்.
தொழிற்பழகுனர் பயிற்சி பெறுவோருக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. மேலும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரப்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது.