Home உலகம் இம்ரான்கான் பங்களாவுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார்

இம்ரான்கான் பங்களாவுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார்

by Jey

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பரிசுப்பொருள் மோசடி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அத்துடன் பெண் நீதிபதியை மிரட்டியதாக மற்றொரு வழக்கும் பதிவாகி உள்ளது.

இந்த வழக்குகளில் அவருக்கு பிரவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இஸ்லாமாபாத் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வரும் பரிசுப்பொருள் மோசடி வழக்கின் விசாரணைக்கு நேற்று முன்தினம் அவர் ஆஜரானார். முன்னதாக அவரை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது பங்களாவுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் சென்றனர்.

அப்போது இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 25-க்கு மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இம்ரான் கானுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், தன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஒவ்வொரு காவலர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

related posts