இலங்கையின் சிங்கள அரசியலை தேரவாத பௌத்தத்தைக் கோட்பாட்டின் அடித்தளத்திலிருந்தும், புவிசார் அரசியல் கண்ணோட்டத்தினுாடகவும் நோக்குவது அவசியமானது.
காலனித்துவ ஆட்சிக்கு பின்னனா இலங்கையின் அரசியல் வரலாறு என்பது மிகவும் வினோதமானது.
மகாவம்சம் என்ற ஐதீக கதையிலிருந்து கட்டமைக்கப்பட்ட ‘தம்மதீப’ கோட்பாட்டினை மையப்படுத்தியே சிங்கள தலைவர்கள் தமக்கிடையிலான அரசியல், பொருளியல், வர்க்க, பதவி போட்டிகளையும் பிரச்சனைகளையும் அணுகுகின்றனர்.
பொதுவாக ஆதிக்கப் போட்டிகள் ஏற்படுகின்ற போது அதனைத் தமிழருக்கு எதிரான அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதமாக மடைமாற்றி அரசியற் படுகொலைகளை நிறைவேற்றி தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வர்.
இத்தகைய போக்கு இலங்கையின் பௌத்த வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை தொடர்வதைக் காணலாம்.
அத்தகைய நிகழ் போக்கை வரலாற்றுரீதியாக இரண்டு அரசியல் படுகொலை வரலாற்று நிகழ்வுகளை நோக்குவதன் மூலம் இலங்கையின் அரசியல் போக்கினை புரிந்துகொள்ள போதுமானது.
இலங்கையின் தேரவாத பௌத்தத்தின் வரலாறு என்பது கிறிஸ்துக்கு முன் 247இல் இந்தியாவிலிருந்து வருகை தந்த மகிந்த தேரர் அனுராதபுரத்தின் மன்னனான தீசனை பௌத்தனாக மதம் மாற்றி அசோகச் சக்கரவர்த்தியின் பட்ட பேரான ‘தேவநாம்பிய’ என்ற பட்ட பேருடன் இணைத்து தேவநாம்பியதீசன் என்ற பெயரை இட்டு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட முடியை அணிவித்து அனுராதபுரத்தின் பௌத்த மன்னனாக முடிசூடப்பட்டான்.
அவ்வாறு முடிசூடப்பட்டவன் பேரளவில் மன்னனாக இருந்தானே தவிர உண்மையான முடிக்குரிய, அதிகாரத்துக்குரிய மன்னனாக அசோகச் சக்கரவர்த்தியின் மகனான மகிந்த தேரரே பௌத்த துறவி என்ற வேடத்தில் அனுராதபுரத்திலிருந்து அதிகாரம் செலுத்தினார் என்பதே உண்மையானது.
மகாநாமதேரர் இதனைக் கருத்தில் கொண்டும் அதற்கு பின்னனா தொடர் வரலாற்றில் இந்திய ஆக்கிரமிப்பு குறிப்பாகத் தமிழகத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி தமிழ் மன்னர்கள் படையெடுத்துக் கைப்பற்றியமையும், அதேபோன்று வட இலங்கை