வரவு செலவுத் திட்டத்தில் பணவீக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் மற்றும் அதிகரித்துச் செல்லும் வட்டி வீதம் ஆகிய சிக்கல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுகளை வழங்க முயற்சிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், மத்திய அரசாங்கத்தினால் மட்டும் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
லிபல் அரசாங்கத்தினால் எதிர்வரும் 28ம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.