Home இந்தியா உலகம் முழுவதும் ஒலிபரப்பு மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி

உலகம் முழுவதும் ஒலிபரப்பு மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி

by Jey

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 30-ந்தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. இதுபற்றி பா.ஜ.க. வட்டாரம் தெரிவித்து உள்ள தகவலில், இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஒலிபரப்பு செய்வதற்கான நோக்கம் என்னவெனில், பிரதமர் மோடி உலகளாவிய ஒரு தலைவராக இருக்கிறார்.

 

 

related posts