இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆசிரியர்களின் இடமாற்றத்தை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இதேவேளை மற்றுமொரு குழுவினர் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிள்ளைகளின் கல்வி உரிமையை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான சூழலில் அப்பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு இடையில் முறுகல் நிலை பதிவாகியிருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், இதனையடுத்து ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த குழுவினர் அப்பகுதியிலிருந்து பேரணியாக செல்ல முற்பட்ட வேளை அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் அவர்கள் பேரணியாக செல்வதை தடுத்துள்ளனர்.
அத்துடன் அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.