Home இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எதிராக விசாரணை

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எதிராக விசாரணை

by Jey

இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்தொழிலாளர்கள் 12 பேர் அத்துமீறி கடற்தொழில் நடவடிக்கையில் இலங்கை கடற்பகுதியில் ஈடுபட்டிருந்த போது நேற்று (23.03.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்தொழில் நடவடிக்கையில் இருக்கும்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு கடற்தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்த கடற்படையினர் கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எதிராக கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்குத்தாக்கலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

ஊர்காவற்றுறை நீதவான் பன்னிரெண்டு கடற்தொழிலாளர்களையும் பதின்நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

related posts